ஏய் இன்னைக்கு வியாபாரம் நல்லாருக்குப்பா!!

எலேய் ....நாட்டமைய எங்கலே??

My photo
எனது விருப்பங்களை வாசித்த பிறகு ....உங்களுக்கு என்னை பற்றி என்ன தோன்றுகிறதோ ......அதுதான் ...நான்

Feb 3, 2010

வெறிச்சோடிய டீக்கடை .....





















வெறிச்சோடிய டீக்கடை .....
வார்த்தைகள் அற்ற கை குலுக்கல்!

நகரின் மைய பகுதி டீக்கடை அது
நானும் அண்ணனும் சேர்ந்து செல்வோம்

சில சமயங்களில்

நான் அவனையும்
அவன் என்னையும்
முந்தி ...அல்லது
சேர்ந்து  குடித்த டீக்கள்...
மிச்சமிருக்கிறது சூடான
நினைவுகள்!

ஆறவில்லை 

பழகிய மாஸ்டர் ....
பழக்கப்படுத்தப்பட்ட  பிளாஸ்டிக் கப்புகள்

எப்போதும் பலவகையான  பேச்சுகள் ...
வாகன இரைச்சல் ..
இன்று
டீக்கடை
ஊமையின் பேச்சாக....

வெறிச்சோடிய டீக்கடையாக.. ...

ரயில் கிளம்பும் வரை பல வகையான
பேச்சுக்கள் ..
பார்வைகள்...

இறுதியில் .

வார்த்தைகள் அற்ற...

கண்கள் மட்டும் உணர்ந்து  கொள்ள

கை குலுக்கல்...




{என் அண்ணன் புதிய
வேலையில் சேர்வதற்காக  
அண்டை மாநிலத்திற்கு
போய்விட்டான் }




இது என்ன வகையான பதிவு  என்று கேட்டுவிடாதிர்கள்  ..
ஏனென்றால் என்னக்கே
தெரியாது .
ஏதோ மனதில் தோன்றியதை எழுதி இருக்கிறேன்
தவறு இருந்தால் தயங்காமல் கூறவும்

அன்புடன் கிச்சான்

19 comments:

  1. மனதை தொடும் வகையான பதிவுதான்!

    ReplyDelete
  2. கவிதை நல்லாத் தானுங்க இருக்கு! இவ்ளோ அழகான கப்புலே எந்த ஊருலே டீ கொடுக்காக? :-))

    ReplyDelete
  3. «ýÒ츢ɢ ¸¢îº¡ý.
    மிக அற்புதமான கவிதை.
    நல்ல சொற்சிக்கணம் இருக்கு.
    கூர்ந்த பொருள் செரிவும் இருக்கு.
    வாழ்த்துக்கள்

    //ஆறவில்லை,
    பழகிய மாஸ்டர்,
    பழகிப்போன ப்ளாஸ்டிக் கப்புகள்.//

    இதோடு மிகத்துள்ளியமான கவிதை
    முடிந்துவிட்டது.

    நான் வாத்தியாரில்லை.
    ஆலோசகன் சொல்லலாமில்லையா?

    ReplyDelete
  4. வாங்க தோழர் !
    ஜனார்த்தனன் அவர்களே
    வருகைக்கும் கருத்திட்டமைக்கும்
    நன்றி

    அன்புடன் கிச்சான்

    ReplyDelete
  5. வாங்க தோழர் !
    சேட்டைக்காரன் அவர்களே
    வருகைக்கும் கருத்திட்டமைக்கும்
    நன்றி

    அன்புடன் கிச்சான்

    ReplyDelete
  6. தோழர் காமராஜ் அவர்களே!

    சிற்பியை

    பழிக்கும்

    கற்கள் உண்டா?

    அன்புடன் கிச்சான்

    ReplyDelete
  7. நல்ல கவிதைதான். ஏன் உங்களுக்கே உங்கள் படைப்பின் மேல் சந்தேகம்?

    ரேகா ராகவன்.

    ReplyDelete
  8. நல்லாதான் இருக்கு... ஏன் சந்தேகம்?

    ReplyDelete
  9. வாங்க தோழர் !
    ரேகா ராகவன் அவர்களே
    வருகைக்கும் கருத்திட்டமைக்கும்
    நன்றி
    எனது படைப்பின் மீது சந்தேகம் இல்லை
    கவிதை எழுதுகிற அளவுக்கு
    நான் இன்னும் வளரவில்லை
    என்பது எனது தாழ்மையான கருது

    ReplyDelete
  10. வாங்க தோழர் !
    அண்ணாமலையான் அவர்களே
    வருகைக்கும் கருத்திட்டமைக்கும்
    நன்றி

    எனது படைப்பின் மீது சந்தேகம் இல்லை
    கவிதை எழுதுகிற அளவுக்கு
    நான் இன்னும் வளரவில்லை
    என்பது எனது தாழ்மையான கருது

    ReplyDelete
  11. வாங்க தோழர் !
    Sivaji Sankar அவர்களே
    வருகைக்கும் கருத்திட்டமைக்கும்
    நன்றி

    ReplyDelete
  12. //நான் அவனையும்
    அவன் என்னையும்
    முந்தி ...அல்லது
    சேர்ந்து குடித்த டீக்கள்...
    மிச்சமிருக்கிறது சூடான
    நினைவுகள்!//

    பத்திரமாய் சேர்த்து வையுங்கள் நண்பா. தனிமையிலும் அது ஒரு கதகதப்பை தரும்...

    நல்ல கவிதை!!

    ReplyDelete
  13. வாங்க தோழர் செந்தில் நாதன் அவர்களே !
    வருகைக்கும் கருத்திட்டமைக்கும்
    நன்றி

    அன்புடன் கிச்சான்

    ReplyDelete
  14. கவிதையை விட மனநிலை புரிகிறது!

    ReplyDelete
  15. வாங்க தோழர்
    அன்புடன் அருணா அவர்களே !
    வருகைக்கும் கருத்திட்டமைக்கும்
    நன்றி

    அன்புடன் கிச்சான்

    ReplyDelete
  16. மனசுல பட்டதை எழுதித் தள்ளுங்க.இதுக்கு போய் யோசித்துக்கொண்டு

    ReplyDelete
  17. Please add your posts to tamilish, tamilmanam, etc.

    ReplyDelete
  18. வாங்க தோழர் !
    ஷிர்டி .சைதாசன் அவர்களே
    வருகைக்கும் கருத்திட்டமைக்கும்
    நன்றி

    அன்புடன் கிச்சான்

    ReplyDelete

நாங்களெல்லாம் எப்பவுமே பிசி...தான்