ஏய் இன்னைக்கு வியாபாரம் நல்லாருக்குப்பா!!

எலேய் ....நாட்டமைய எங்கலே??

My photo
எனது விருப்பங்களை வாசித்த பிறகு ....உங்களுக்கு என்னை பற்றி என்ன தோன்றுகிறதோ ......அதுதான் ...நான்

Mar 10, 2012

நீரோடை

நீரோடை


மனம் எதிலும் நாட்டமில்லாமல்

ஆற்று நீரோடையை போல ஓடிக்கொண்டு இருக்கிறது

இந்த முடிவில்லா ஓட்டத்தின் முடிவுதான் என்ன ?


நீரோடைக்கு என்ன நாட்டம் இருக்கு முடியும் ?


நீர் ஓடினால்

நீரோடை

இல்லையென்றால்

வெறும் ஓடை !






நீரோடைக்கு என்ன கவலை இருக்க முடியும் ?


தன்னுள் அல்லது தன்னால் வாழும் மீன்களை பற்றிய கவலையா?


மீன்களுக்கு தேவையான புழுக்களும் ,பூச்சிகளும் தான் இல்லை என்றால்

ஜனிக்காது

என்ற

ஆணவமா

அல்லது

இரக்கமா


என்னை நீ எப்படி வேண்டுமானாலும்

எடுத்துக்கொள் என்றது


உன் பேச்சில் ஆணவம் தெறிக்கிறது என்றேன்


தெறிகட்டுமே

அதனால் என்ன என்றது


சிரித்தேன்


ம்ம் ....என்ன சிரிப்பு என்றது நீரோடை


நான் இல்லை என்றால் சகல ஜீவராசிகளும் உலகத்தில் கிடையாது என்றது


காற்று இல்லை என்றாலும் சகல ஜீவராசிகளும் கிடையாது என்றேன்


எனது பேச்சை துச்சமாக மதித்து


அவன் என்னில் இருந்து வந்தவன் என்றது


திடிரென்று


படைத்தலை செய்கின்ற எவனுக்குமே

ஆணவம் உண்டு


அதில்

நீ , நீர்

என்ற பேதமே கிடையாது

என்றது


ஆணவத்தால் படைக்க படும் படைப்பு

ஆத்மார்த்தமான

முழுமையை பெறுவதில்லை

என்றேன்


நீ வெறும் ஏட்டு சுரைக்காய் என்றது


நான் பதில் பேசவில்லை


நீ ஏதோ மகாகாவியம்

படைக்கிற மாதிரி எழுதுகிறாய்

என்று

என் எழுத்தை விமர்சனம் செய்தது


நான் மறுப்பேதும் சொல்லவில்லை


ஆனாலும் நீரோடை

சொன்னது எனக்கு பிடித்து இருந்தது


நீ குழப்பமாக இருக்கிறாய் என்றது


மவுனம் என்றும் குழப்பம் விளைவிப்பதில்லை

என்றேன்

கோபம் கொண்ட நீரோடை


என் சலசலப்பையும் ..

என்னால் வரும் ஓசைகளையும் ..

நான் ஏற்படுத்தும் மெல்லிய கீதங்களையும்

நீ

உதாசீனப்படுதுகிறாய் என்றது


உண்மைதான்


கரைகளாலும் ,மடைகளாலும்,

வரப்புகளாலும்

கட்டுபடுத்தப்பட்ட

மனநிலையில் இருக்கும்

உன்னிடம்

இருந்து வரும் சத்தங்களை

நான் எப்படி

கீதங்கள் என்று ஒப்புகொள்ள

முடியும் என்றேன்


தனது பேச்சை திசை திருப்பியது


நான் வார்த்தைகளால் நீரை வென்று விட்ட

மமதையில் இருந்தேன்


என்னை கண்டும் காணாது போல் பேசியது


எனது மேல் நீந்தி விளையாடும் மீனை

ரசிக்கிறாய் ,

குதியாட்டம் போடும் சிட்டு குருவிகளை

ரசிக்கிறாய்,

கரு கருவென்று இருக்கும் நீர் காக்கையை கூட

ரசிக்கிறாய்,

(இதை சொல்லும் போதே

நீர் காக்கையை நீரோடைக்கு பிடிக்க வில்லை

என்று தெரிந்து கொண்டேன் )


கரையோரமாக குளிக்கும் இளம் பெண்களை

ரசிக்கிறாய்

இல்லை


உன் காமப் பார்வையால் அவர்களை உற்று நோக்குகிறாய்

என்று சந்தடி சாக்கில்

என்னை பற்றிய உண்மையை

ரகசியத்தை

போட்டு உடைத்து


நான் பதற்றமாக...... இல்லை என்று மறுத்தேன்


எனது பேச்சை சட்டையே செய்யாமல் பேசிக்கொண்டே இருந்தது


என் இயலாமையை மறைக்க

கோபமாக வெளிப்படுத்தினேன்


அப்படி என்றால்


நீ கூடத்தான் பெண்களை முழுமையாக

தழுவுகிறாய்

என்றேன்


முதல் முறையாக நீரோடை சிரித்தது

அந்த சிரிப்பில் வன்மம் இல்லை


நீ கூறியது உண்மைதான்

நான் பெண்களை முழுமையாக தழுவுகிறேன்


பெண்களைமட்டும் அல்ல ,மரம் செடி ,கொடிகளையும்

என் மீது மிதந்து வரும் பிணங்களையும் ,

என்னை தடுக்கும் பாலங்களையும் ,

பயிர்களையும் ,கால்கழுவும் மனிதர்களையும் ,

உன்னைப்போல் எழுதுகிறவர்களின் எழுத்துக்களை சுமந்து

வரும் காகிதங்களையும் கூட நான் தழுவுகிறேன்

என்று மூச்சு விடாமல் கூறியது


என் தழுவல்களில் உள்ள தாய்மையை உன்னால் புரிந்து

கொள்ள முடியாது என்றது


உன் தழுவல்களில் விருப்பு, வெறுப்பு உள்ளது என்றேன்


விருப்பு வெறுப்பு அற்று எல்லோரையும் தானாக பாவித்து

தழுவுவது

ஒருவனே

அவனே கடவுள் என்றேன்


ஹஹா ஹஹா என சிரித்தது


என் மேல் வெறுப்பையும்

கடவுள் மீது விருப்பும்

கொண்ட ஒருவனால்

எனது தழுவுதலின் புணிதத்தை

தெரிந்து கொள்ள முடியாது


என்று

ஓடிக்கொண்டே இருக்கிறது.....

நீரோடை

நாங்களெல்லாம் எப்பவுமே பிசி...தான்