ஏய் இன்னைக்கு வியாபாரம் நல்லாருக்குப்பா!!

எலேய் ....நாட்டமைய எங்கலே??

My photo
எனது விருப்பங்களை வாசித்த பிறகு ....உங்களுக்கு என்னை பற்றி என்ன தோன்றுகிறதோ ......அதுதான் ...நான்

Dec 16, 2009

நானும்தாத்தாவும் ........

பொதுவாவே பேரன்னாலே பாட்டியோடதான் ஒரு நெருக்கமான பாசத்தோட இருப்பாங்கனு சொல்லுவாங்க !
ஆனா என் விஷயத்துல இது கொஞ்சம் மாறுதல்
எனக்கு எப்பவுமே தாத்தவோடதான் ....வார்த்தைகளில் சொல்லமுடியாத ...பாசம் ...நேசம்.... ப்ரியம்
இது நான் வளர்ந்த பிறகும் மாறாத அன்பு
நான் ரொம்ப தடவ யோசிச்சிருக்கிறேன்......என் இவ்ளவு பாசம் அவர்மேலனு

ப்ச்...






தெரியல //
இந்த விடை தெரியாதகேள்வின்னுடே என்னை பற்றி தாத்தாவும் .....
தாத்தாவை பற்றி நானும் ....


நான் பிறந்தவுடன் என் அப்பா , தாத்தாவிடம் ( அப்பாவின் அப்பா ) என்னை ஒப்படைத்தனர் வளர்ப்பதற்காக
10 வயது வரை தாத்தா பாட்டி தான் எனக்கு அப்பா அம்மா.
தாத்தா பாட்டினுடைய ஊர் திருநெல்வேலி மாவட்டம்அம்பாசமுத்திரத்தில்உள்ள முடப்பாலம் என்னும் அழகிய கிராமம் .வாய்க்கால் வயல் கேலி கிண்டல் இதுதான் எங்க கிராமம் .


என்னை பற்றி தாத்தா :

"சின்ன வயசுல(1 -6 ) உனக்கு அவ்வளவு தெம்பு கிடையாதுபா , இந்த காலு ரெண்டும் கிடு ..கிடுனு ஆடிக்கிட்டே.. இருக்கும், ஒரு எடத்துல ஒக்கார வச்சா..அங்கினயே மக்கு பய மாதிரி உக்காந்துருப்ப, வயறு மட்டும் பானகணக்கா துருத்திகிட்டு இருக்கும் .
ஒரு மட்டம் நான் ஒரு கல்யாணத்துக்கு போயிருந்தப்ப ..உன்ன என் தோளுல தூக்கி வச்சிருந்தப்ப..அப்படியே மேல..இருந்து எருவியடிசுட்ட.... பொறவு ....வேட்டி ,சட்டை எல்லாத்தயும் வாய்க்கால்ல போயி அலசிட்டு வந்தேன் .

அப்ப ஒனக்கு வெவரந் தெரியாம எங்கள அப்பாஅம்மா னுதான் கூப்புடுவ ஒரு தடவ ஆத்துக்கு குளிக்க போயிருந்தப்ப நம்ம ஊர்கார பொம்பளைக "என்ன மச்சாவி , இந்த வயசுல போயி பிள்ளையா?!! மைனி என்னத்துக்கு ஆவாக !!னு கூடி சிரிப்பாணியா ...சிரிப்பாளுக "என்றார் சின்ன புன்னகையுடன் .

கொஞ்சம் வளர்ந்த அப்புறம் நல்ல ஊணி ..நடக்க ஆரம்பிச்ட்ட.
நான்தான் "நல்லா சாப்பாடு கொடு லா! "னு ஆச்சிட்ட சொல்லுவேன் .
அப்ப நீ நல்லா... சாப்பிட்டபா...
அந்த வயசுல நீ பழியா... (பயங்கரமா ) சண்ட போடுவ ஆச்சியோட !
ஏன் ?..இது நான் .
ஓயாம.. அந்த கத்தரிக்கவே ...போட்டே ..கறி.. வைக்கானூட்டு நடக்கூடத்து கதவ கல்லகொண்டே எறிவே ....கோவத்துல !
நான் உழுதுட்டு வந்த ஒடனே ஒங்க ஆச்சி ஏன்ட்ட ஆவலா....தி சொல்லுவா ..



தொடரும்......







என் ஆச்சியினுடைய குரல் என்னை பற்றி

7 comments:

  1. நான் முதல் பின்னூட்டமிடுவதில்
    பெருமிதம் கொள்கிறேன்.
    ரெண்டு காரணம்.
    ஒண்ணு மொழியில்
    பிசைந்து கிடக்கிற மண்மனம்.
    அப்றம் இந்த ப்ளாக்கோட பெயர்,
    அது என்னோடு கூட இருக்கும் கனவு
    அதாவது என் மூத்த பையனின் பெயர்.
    துவழாமல் எழுத எழுத நிலைக்கலாம்.
    ஒங்களோட ப்ரொபைல் பார்த்தேன்,
    அதற்கான தகுதி இருக்கு.
    வாழ்த்துக்கள் கிச்சான்.

    ReplyDelete
  2. நன்றி தோழரே !
    ஒன்று
    என்னை தோழனாக ஏற்றதற்கு !
    ரெண்டு
    நான் வியந்த writter என் அருகில்

    ReplyDelete
  3. ஏன் அப்பாவால் கோபத்தோடு வைக்கப்பட்ட ..........பின்பு
    கிண்டலாக கூப்பிட்ட பெயர் தான்
    இந்த கிச்சான்

    ReplyDelete
  4. எல்லாம் யதார்த்தமாக நடந்து விடுகிறது கிச்சான்.காமராஜ் ரொம்ப நல்லா உங்களை சொல்லிட்டார்.கூடுதலாக ஒன்னும் என்னிடம் இல்லை.பாட்டி குரலில் கண்கள் கலங்கியது.

    தொடர்ந்து எழுதுங்கள் கிச்சான்.

    ReplyDelete
  5. வருகைக்கும் கருத்திட்டமைக்கும்

    நன்றி தோழர் ராஜாராம் அவர்களே !

    ReplyDelete
  6. அப்ப ஒனக்கு வெவரந் தெரியாம எங்கள அப்பாஅம்மா னுதான் கூப்புடுவ ஒரு தடவ ஆத்துக்கு குளிக்க போயிருந்தப்ப நம்ம ஊர்கார பொம்பளைக "என்ன மச்சாவி , இந்த வயசுல போயி பிள்ளையா?!! மைனி என்னத்துக்கு ஆவாக !!னு கூடி சிரிப்பாணியா ...சிரிப்பாளுக "என்றார் சின்ன புன்னகையுடன் .
    மேலும் படிக்க ஆர்வமாய்...

    ReplyDelete
  7. தங்கள் வருகைக்கு நன்றி ரிஷபன் ,வேதாளம் போல் மீண்டும் முருங்கை மரம் ஏறுகிறேன்

    ReplyDelete

நாங்களெல்லாம் எப்பவுமே பிசி...தான்